சென்னை: கனமழை பெய்து வருவதால், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.,13) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


சென்னை மற்றும் புறநகரில் நேற்று இரவு, 8:00 மணி முதல், ஆங்காங்கே மிதமானது முதல் கனமழை பெய்து வந்தது. மழை காரணமாக நகரின் பல இடங்களிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரிலும் கனமழை கொட்டியது. இந்நிலையில் விடிய விடிய மழை தொடர்ந்து பெய்து வருவதால், சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் தெரிவித்தார்.

மேலும் தொடர்மழை காரணமாக காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.