மதுரை ''சி.பி.எஸ்.சி., உள்ளிட்ட அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் திருக்குறளை கற்பிக்க வேண்டும்,'' என மதுரையில் பா.ஜ., முன்னாள் எம்.பி., தருண் விஜய் தெரிவித்தார்.அவர் பேசியதாவது: மதுரையில் இருந்து, தமிழ்ச் சங்கத்தின் முதல் தலைவராக இருந்த இறைவன் சிவனின் ஊரான வாரணாசி வரை, வரும் ஜனவரியில் திருவள்ளுவர் பயணம் செல்கிறோம். 

2,௦௦௦ கி.மீ., பயணத்தில் திருக்குறள், திருவள்ளுவரின் பெருமை குறித்து மக்களுக்கு எடுத்துரைக்க ள்ளோம்.சி.பி.எஸ்.சி., உள்ளிட்ட அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் திருக்குறளை கற்பிக்க வேண்டும். 
திருக்குறள் இல்லை என்றால் கல்வியும், தேசிய ஒருமைப்பாடும் முழுமை பெறாது. தேசிய ஒருமைப்பாடு குறித்து திருவள்ளுவர் பல்வேறு விளக்கங்களை குறள் மூலம் நமக்கு கூறியுள்ளார், என்றார். பா.ஜ., மாநில 
செயலாளர் சீனிவாசன், மாவட்ட தலைவர் சசிராமன், உடனிருந்தனர்.