தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள புதிய பாடத்திட்டத்தை 17 நாடுகள் வரவேற்றிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கட்டுப்பாட்டுக் கருவி என்பது பள்ளிக்கல்வித்துறை மூலம் ஆணையிடப்படவில்லை. அதைப் பொருத்தவரையிலும் போக்குவரத்து துறை மூலமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளிப் பேருந்து விபத்துக்கள் எங்கு நடைபெறுகிறது என்பதை நாங்கள் ஆய்வு செய்துவருகிறோம். எல்லோருக்கும் அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது. அந்த அறிவுரைகளை ஏற்று பள்ளிப் பேருந்துகளை வேகமாக இயக்காமல், மாணவர்களை பத்திரமாக வீடுகளில் விடுவதற்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள புதிய பாடத்திட்டத்தை 17 நாடுகள் வரவேற்றுள்ளன. புதிய பாடத்திட்டம் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை விட மேலாக இருக்கும்" என தெரிவித்தார்.