கோவை: 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் கீழ், 'ஸ்வயம்' செயல்பாடுகளுக்காக, அனைத்து, பல்கலை, கல்லுாரிகளிலும், 'வை - பை' வசதியை ஏற்படுத்த, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மத்திய அரசு, 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் கீழ், பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில், 'ஸ்வயம்' எனப்படும், 'ஆன் - லைன்' முறையிலான கல்வி முறை, முக்கிய இடம் பெற்றுள்ளது.திட்டத்தை, மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பயன்படுத்தும் வகையில், கல்வி நிறுவனங்களில், அதிக வேகம் கொண்ட, 'வை -- பை' வசதி ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.வசதியை, அரசுஉரிமம் பெற்ற, டெலிகாம் நிறுவனங்களிடம் இருந்து பெற்று செயல்படுத்த வேண்டும். உரிமம் பெற்ற நிறுவனங்களின் பட்டியல், ஏ.ஐ.சி.டி.இ., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான செலவை, அந்தந்த கல்வி நிறுவனங்களே ஏற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும், ஆக., 15ம் தேதி முதல், இவ்வசதியை, மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.