சென்னை: தொழில் நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் நடத்தப்பட்ட, கணினி சான்றிதழ் தேர்வு முடிவு, இன்று அறிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து, அந்த இயக்ககத்தின் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தொழில் நுட்ப கல்வித்துறையால், 2017, டிசம்பரில் நடத்தப்பட்ட, கணினி சான்றிதழ் தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகிறது. முடிவுகளை, சென்னையில் உள்ள, தொழில் நுட்ப கல்வி இயக்கக அலுவலகம் மற்றும் அதன் இணையதளமான,www.tndte.gov.inல் காணலாம்.
தேர்வு நடந்த, பாலிடெக்னிக் கல்லுாரி மையங்களிலும், முடிவுகள் வெளியிடப்படுகின்றன. வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களும் சரிபார்த்து வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.