TN,Tamilnadu,தமிழகம்,தமிழ்நாடு

சென்னை: பஸ் கட்டண உயர்வுக்கு, பல தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தமிழக அரசு, கட்டணத்தை கொஞ்சம் குறைத்துள்ளது.
இதன்படி, கி.மீ.,க்கு, சாதா பஸ்களில், இரண்டு பைசா; விரைவு மற்றும் சொகுசு பஸ்களில், ஐந்து பைசா, அதிநவீன சொகுசு பஸ்களில், 10 பைசா, விரைவு, 'ஏசி' பஸ்களில், 10 பைசா என்ற அளவில், கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைந்தபட்ச கட்டணம், ஐந்திலிருந்து நான்கு ரூபாயாகிறது. இந்த கட்டண குறைப்பு, மாநிலம் முழுவதும் இன்று(ஜன.,29) முதல் அமலுக்கு வருகிறது.