சென்னை, பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, 'நெட்' என்ற, தேசிய தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த ஆண்டுக்கான நெட் தேர்வு, நவம்பரில் நடந்தது; 9.30 லட்சம் பேர் எழுதினர். இதன் முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன. இவற்றை, cbsenet.nic.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.