சென்னை : அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 1,000 முதல் 3,000 ரூபாய் வரை பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.* கடந்த ஆண்டு அரசு ஊழியர்களில் 'சி' மற்றும் 'டி' 

பிரிவைச் சேர்ந்த பணியாளர்கள் உள்ளாட்சி பணியாளர்கள் மற்றும் அரசின் மானியம் பெறும் கல்வி நிறுவனங்களின் பணியாளர்களுக்கு 30 நாள் ஊதியத்திற்கு இணையான தொகையை தற்காலிக மிகை ஊதியமாக கணக்கிட்டு 3,000 ரூபாயை உச்ச வரம்பாக வைத்து, போனஸ் வழங்கப்பட்டது. அதேமுறை பின்பற்றி இந்த ஆண்டும் வழங்கப்படும். தற்காலிக மிகை ஊதியமானது 2017 மார்ச் 31ல் உள்ள ஊதியம் அடிப்படையில் கணக்கிடப்படும்
* முழு நேர மற்றும் பகுதி நேர பணியாளர்கள், தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வந்த சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள்... தற்காலிக உதவியாளர்கள், தினக்கூலி பணியாளர்கள் அனைவருக்கும் சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் 1,000 ரூபாய் அனுமதிக்கப்படும்
* மாநில அரசில் இருந்து நிறுவனங்கள், வாரியங்கள் ஆகியவற்றில் அயல் பணியாக பணிபுரிந்து வரும் 'சி' மற்றும் 'டி' பிரிவு அலுவலர்கள் சம்பந்தப்பட்ட 
நிறுவனங்களில் மிகை ஊதியம் பெறாத நிலையில் அவர்கள் தற்காலிக மிகை ஊதியம் பெறலாம்
* தமிழக அரசு பணியில் உள்ள, 'ஏ' மற்றும் 'பி' பிரிவு அலுவலர்கள், அனைத்திந்திய பணி அலுவலர்கள் போன்றோருக்கு இந்த போனஸ் உத்தரவு பொருந்தாது என தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.