வாட்ஸ்அப்பை ஹைஜாக் செய்யப் போகிறது ஹைக்கின் டோட்டல் எனும் ஆப். டோட்டல் என்ற பெயரிலான ஆண்ட்ராய்ட்  ஆப் ஒன்றை அறிமுகப் படுத்துகிறது மெசெஞ்சர் சேவையில் தனி இடம் பிடித்த ஹைக். புதன்கிழமை இதற்கான அறிமுகம் நடைபெற்றது.

இதன் சிறப்பு என்ன என்றால், இணையதள சேவை இல்லாலேயே இதில் மெசேஜ்களை அனுப்பிக் கொள்ளலாம்; கட்டணங்களை செலுத்தலாம்.
 மெசேஜ் அனுப்பல், செய்திகள் பார்த்தல், ரீசார்ஜ் செய்தல் ஆகியவை இதன் மூலம் டேடா கனெக்சன் இல்லாமலேயே நடைபெறுமாம்.


ஹைக் மெசெஞ்சர் இதை அறிமுகம் செய்துள்ளது இது வாட்ஸ்அப்புக்கு போட்டியாக உருவெடுக்கும் என்று கருதப் படுகிறது.

ஹைக் டோடல் - ஆண்ட்ராய்டின் ஒரு வெர்ஷன், ஸ்மார்ட் போன்களில் குறைந்த டேடா பேக்களுடன் ரூ.1 துவக்க விலையுடன் அறிமுகம் ஆகிறது. இதனை, ஹைக் மெசேஞ்சர் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியும் நிறுவனருமான கவின் பார்தி மிட்டல் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தியாவில் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் ஆகியவை மிகுந்த, வரவேற்பை பெற்ற மெசேஜ் ஆப்புகள். இவற்றுடன் போட்டியாக ஹைக்-டோடல் வரவுள்ளது.

மார்ச் 1ம் தேதி முதல், சில வகை ஆண்ட்ராய்ட் போன்களுடன் டிபால்ட்டாக வரவுள்ளது இந்த ஆப். இண்டக்ஸ் அகுவா லையன்ஸ் என்1, அகுவா லையன்ஸ் டி1, கார்பன் ஏ40 என சில குறிப்பிட்ட மொபைல்களுடன் வருகிறது. ஏர்டெல், ஏர்செல், பிஎஸ்என்எல் நெட்வொர்க்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, இந்த போன்கள் வாங்குவோருக்கு ரூ.200 மதிப்பில் இலவசமாக  டோட்டல் சர்வீஸ் எதற்கும் செலவு செய்துகொள்ளலாம். இதற்கு ஹைக் டோடல் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

இந்திய மார்க்கெட்டை ஆய்வு செய்தால், 400 மில்லியன் ஸ்மார்ட் போன் பயனாளிகளில், 200 மில்லியன் நபர்கள் வரை தினசரி ஆன்லைனுக்கு வருகிறார்கள் என்று கூறிய மிட்டல், அதற்காக சில திட்டங்களையும் அறிவித்துள்ளார்.

டோட்டல் ஆப், 1எம்பிக்கும் குறைவான 'லைட்வெய்ட்' ஆப். ரயில்வே டிக்கெட் அப்டேட்டுகளையும் இதில் பார்க்க முடியும். செல்போன் எண்ணை வைத்து இன்னும் பல சேவைகளையும் இதில் பெற முடியும். படங்களை நண்பர்களுக்கு அனுப்பலாம்.
 கிரிக்கெட் போட்டி அப்டேட் உள்ளிட்ட பல தகவல்களை இதில் பெறலாம். பணம் செலுத்த முடியும். இணையதள வசதி இல்லாமலேயே இதை செய்ய முடியும் என்பதுதான் இதில் சிறப்பு. என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.