திருவண்ணாமலை: தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடத்திற்கான  செய்முறை தேர்வு கடந்த 2012 முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதில் எழுத்து தேர்வுக்கு 75 மதிப்பெண்ணும், செய்முறை தேர்வுக்கு 25 மதிப்பெண்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வு வரும் மார்ச் 16 முதல் ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி,  10ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடத்திற்கான செய்முறை தேர்வை வரும் 20ம் தேதி முதல் 28ம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதனால் செய்முறை தேர்வு நடத்துவதற்கான பணிகளில் கல்வித்துறை அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.