மாணவர்களின் கண்பார்வை நலனைப் பாதுகாத்திடும் வகையில் வகுப்பறைக் கரும்பலகையில் எழுதும் எழுத்தின் அளவை பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் நிர்ணயம் செய்துள்ளது அதன்படி, ஆசிரியர்கள் கரும்பலகையில் எழுதும் எழுத்துருக்களின் அளவானது 3 சென்டிமீட்டருக்கும் மேல் இருத்தல் வேண்டும்.


ஒரே அளவிளான எழுத்துருக்களைக் சீரான முறையில் எழுதிடும் வகையில் கரும்பலகையின் ஓரங்களில் எழுத்துரு அளவைக் குறித்து வைத்துக் கொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறையின் இந்த எழுத்தளவு நிர்ணயமானது தமிழ்நாட்டில் இயங்கி வரும் அனைத்துவகைப் பள்ளிகளுக்கும் பொருந்தும்.