திருப்பூர் : பொதுத்தேர்வுகளுக்கு, நான்கு நாள் ஓய்வு என்ற நிலையில், அடுத்த தேர்வு வரும், 2ல் நடக்கிறது.


பிளஸ் 2 பொதுத்தேர்வு, இம்மாதம் முதல் துவங்கி நடந்து வருகிறது. மார்ச், 7ல் பிளஸ் 1 பொதுத்தேர்வும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த, 16 லும் துவங்கியது. மாறிமாறி மூன்று வகுப்புகளுக்கான தேர்வுகளும் நடந்து வந்த நிலையில் இன்றும், நாளையும் அரசு விடுமுறை. அடுத்தடுத்து சனி, ஞாயிறு என்பதால், நான்கு நாட்களுக்கு தேர்வு ஏதும் கிடையாது.

வரும், ஏப்., 2ல், பிளஸ் 2வுக்கு, உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணித நடக்கிறது. பிளஸ் 1 வகுப்பு, வேதியியல், கணக்குபதிவியல் தேர்வு, க்கு, 3ம் தேதி நடக்கிறது. பத்தாம் வகுப்புக்கு, ஆங்கிலம், 2ம் தாள் தேர்வு, 4ம் தேதி நடக்கிறது.