தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் இந்த ஆண்டு என்னென்ன தேர்வுகள் நடத்தப்படும் என்பதையும், அதில் எவ்வளவு பேரை தேர்வு செய்ய இருக்கிறார்கள் என்ற தேர்வு கால அட்டவணையை வெளியிட்டிருக்கிறது.


இன்று (1-03-2018) ஆசிரியர் தேர்வாணயம் வெளியிட்டுள்ள தேர்வு கால அட்டவணையில், 25 விவசாயப் பயிற்றுநர்களைத் தேர்வு செய்ய ஜூலை மாதத்தில் தேர்வு நடத்தப்படும் என்றும், அரசு கலைக்கல்லூரிகள் மற்றும் அரசுக் கல்வியியல் கல்லூரிகள் காலியாக உள்ள 1883 பணியிடங்களுக்கு ஜூன் மாதத்தில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு ஜூலை மாதம் பணி வழங்கப்படும் என்றும், 57 தொடக்கக்கல்வி அதிகாரிகள் பணிகளுக்கு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி தேர்வு நடத்தப்படும் என்றும், ஆசிரியர் தகுதித்தேர்வை அக்டோபர் மாதம் 6-ம் தேதி மற்றும் 7-ம் தேதிகளில் நடத்தப்படும் என்றும் அறிவித்திருக்கிறது.

இந்தத் தேர்வுக் கால அட்டணையில், ஏற்கெனவே தேர்வு நடத்தி முறைகேடு காரணமாக தேர்வு முடிவை ரத்து செய்யப்பட்ட, 1065 அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர்களுக்கான தேர்வு, ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், இது நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னரே முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம்.