*சென்னை: தமிழகத்தில் பள்ளிகளில்நடத்தப்படும் விழாக்களின் போது பின்பற்ற வேண்டிய குறித்து புதிய விதிமுறைகளை கல்வித்துறை அறிவித்துள்ளது.*


*இதன்படி பள்ளிகளில் நடத்தப்படும் விழாக்கள் மாலை 6 மணிக்குள் முடிக்கப்படவேண்டும்.*

*விழா நடைபெறும் இடம் மிகவும் பாதுகாப்பானதாகவும், மாணவர்கள் எளிதில் வெளியேறும் வகையில் இருக்க வேண்டும். பள்ளி விழாக்களில் அதிக அளவு ஒலி கொண்ட ஒலி பெருக்கிகள், அதிக அளவு ஒளி கொண்ட மின் விளக்குகளை பயன்படுத்த கூடாது.*

*விதிமுறைகளை அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவிக்க தொடக்க கல்வி அலுவலர்களுக்கு தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.*