சென்னை: முதுநிலை மருத்துவ படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு, 50 சதவீத இடங்கள் உள்ளன.
இந்த இடங்களுக்கு, 'ஆன்லைன்' வாயிலான முதற்கட்ட கவுன்சிலிங்கை, மத்திய சுகாதார துறையின், சுகாதார சேவைகள் இயக்ககம், நேற்று நடத்தியது.இதில், இட ஒதுக்கீடு பெற்றவர்களின் பட்டியல், www.mcc.nic.in என்ற இணையதளத்தில், இன்று வெளியிடப்படவுள்ளது. பட்டியலில் இடம் பெறுவோர், ஏப்., 3க்குள் கல்லுாரிகளில் சேர வேண்டும். இரண்டாம் கட்ட கவுன்சிலிங், ஏப்., 9, 10ம் தேதிகளில் நடத்தப்பட்டு, ஏப்., 11ல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.