சென்னை : தும்மலில் ஆரம்பித்து பெரிய அளவிலான உடல் உபாதைகளுக்கு காரணம் வேறு யாரும் அல்ல. நாம்தான். நம் பண்டைய கால உணவு முறையை மறந்தோம். வேகமான கால ஓட்டம் என்ற பெயரில் நாம் செய்து கொண்ட கோலம் தான் இந்த அலங்கோலம்.


பண்டைய காலத்தில் செய்தது போல செக்கினால் எண்ணெயைப் பிழிந்தெடுக்கும் முறையில் செய்வதே குளிர் மரச்செக்கு எண்ணெய் ஆகும். மரச்செக்கில் விதைகளைஆட்டி அதிலிருந்து எண்ணெயைப் பிழிந்தெடுக்கும் முறையே பாரம்பரிய முறை. மரச்செக்கை இழுக்க காளைகளை பயன்படுத்தினர்.

இப்பாரம்பரிய முறையில் விதைகளை சூடாக்குவதில்லை. வேறு எந்த பொருளையும் சேர்ப்பதுமில்லை. மரச்செக்கு எண்ணெயில் விதையின் அனைத்து சத்துகளும், ஆன்டி ஆக்சிடென்டுகளும் காப்பாற்றப்படுவதோடு, அவற்றின் இயற்கை தன்மையும் காக்கப்படுகின்றன.

நம் முன்னோர்கள் ஆரோக்கியமான எண்ணெயைப் பயன்படுத்தியதால் நீடுழி வாழ்ந்தனர். குளிர் மரச்செக்கு எண்ணை எண்ணற்ற ஆன்டி ஆக்சிடென்டுகளைக் கொண்டிருப்பதால் சமையலில் சுவையைக்கூட்டி வாழ்நாளையும் அதிகரிக்கிறது. இந்த ஆன்டி ஆக்ஸிடன்டுகள் இரத்தத்தில் உள்ள தனித்த எலக்ட்ரான்களை சமன்படுத்துவதால் டி.என். ஏ அமைப்பு மாற்றங்களைத் தடுத்து பல்வேறு நாட்பட்ட மற்றும் கொடிய வியாதிகளிலிருந்து காப்பாற்றுகின்றன.

ஆன்டி ஆக்ஸிடன்டுகளின் இடைவிடாத வரத்து இருந்தால் மட்டுமே அவற்றின் முழுமையான பலன்களை அனுபவிக்க முடியும். ஆனால் இன்று அதை மறந்து விட்டோம். ஆனால் இன்று அதை மறந்து விட்டோம்.