சென்னை: டிரைவிங் லைசென்ஸ் பெற, ஏப்., 1 முதல் ஆதார் சமர்ப்பிப்பது கட்டாயமாகிறது.


இதுகுறித்து, அரசு போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய மோட்டார் வாகன விதியில், மத்திய அரசு, சில திருத்தங்களை செய்துள்ளது. இதன்படி, முகவரி மற்றும் வயது சான்றாக ஆதார் சமர்ப்பிக்க வேண்டும். புதிய டிரைவிங் லைசென்ஸ், பயிற்சி லைசென்ஸ்களில், முகவரி மாற்றம், உரிமம் புதுப்பித்தல் ஆகியவற்றிற்கு, இதுவரை வெவ்வேறு படிவங்கள் பயன்படுத்தப்பட்டன. தற்போது, இப்பணிகளை படிவம் - 2ன் வழியே, ஒரே படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த நடைமுறைகள், ஏப்., 1 முதல் செயல்பாட்டிற்கு வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.