புதுடில்லி: எஸ்.எஸ்.சி.,க்கு, பணியாளர், பணியாளர் குறைகள், சட்டம் மற்றும் நீதித்துறை மீதான, பார்லி நிலைக்குழு அளித்துள்ள பரிந்துரைகள் விவரம்:அரசு பணிகளுக்கான தேர்வுகளின் புனிதத் தன்மையை உறுதி செய்ய வேண்டும். இதற்காக, அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் முறைகேடுகள் நடக்காத வகையில் நடவடிக்கைகள்மேற்கொள்ள வேண்டும்.முறைகேடுகள் நடந்ததாக கூறி, தேர்வுகளை ரத்து செய்வது, அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மதிப்பை குறைத்து விடும்.தேர்வுகளின்போது,கடந்த கால அனுபவங்களைவைத்து, எவ்வகையிலும் தில்லுமுல்லுகள் நடக்காத வகையில் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பரிந்துரைத்து உள்ளது.