சென்னை: சென்னை பல்கலையின், தொலைநிலை கல்வி யில், இளநிலை, முதுநிலை, டிப்ளமா, சான்றிதழ் உள்ளிட்ட படிப்புகளுக்கான, தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன.
தேர்வர்கள், www.ideunom.ac.in என்ற, இணையதளத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.மறுமதிப்பீடுக்கு விரும்புவோர், இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு பாடத்துக்கு, 1,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். மறுகூட்டல் செய்ய விரும்புவோர், பாடத்துக்கு, 300 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கு, நாளை முதல், 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.