சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில், நீட், ஜீ போட்டித் தேர்வுக்கான கையேடுகளை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்டனர். NEET, JEE தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக இலவச கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இலவச கையேட்டை  என்ற தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .அம்மா கல்வியகம் சார்பில் இலவச கையேடு பதிவிறக்கம் செய்வதை ஓபிஎஸ், ஈபிஎஸ் தொடங்கி வைத்தனர்.அறிவுப்பூர்வமான, விஞ்ஞான பூர்வமான கல்வி பெற கையேடு பயனுள்ளதாக இருக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.