சென்னை:ஒரு மாதத்திற்கு மேலாக நடந்த, பிளஸ் 2 தேர்வுகள், நேற்றுடன் முடிந்தன. விடைத்தாள் திருத்தம், வரும், 11ல், துவங்குகிறது.

பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், மார்ச், 1ல், துவங்கின. இந்த தேர்வில், 8.66 லட்சம் பேர் பங்கேற்றனர். இந்த ஆண்டு, உயிரியல் மற்றும் பொருளாதாரம் தவிர, மற்ற பாடங்களின் வினாத்தாள்கள் எளிமையாகவே இருந்தன. நேற்று கணினி அறிவியல், உயிர் வேதியியல் பாடங்களுக்கு தேர்வுகள் நடந்தன.
இத்துடன், பிளஸ் 2 மாணவர்களுக்கு, அனைத்து தேர்வுகளும் முடிந்து விட்டன. தேர்வு முடிவுகள், மே, 16ல் வெளியாகும் என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதையொட்டி, விடைத்தாள்களின் மதிப்பீட்டு பணி, வரும், 11ல், துவங்குகிறது.