திருவாரூர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு, தனியார் பள்ளி மாணவர்கள், 1,300 பேர் கடிதம் அனுப்பியுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில், 2,000த்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இதில், 1,300 மாணவ, மாணவியர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பிஉள்ளனர்.அதில், 'பிரதமர் அவர்களே, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து, தமிழகத்தின் விவசாயத்தையும், டெல்டா விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும்' என, வலியுறுத்தியுள்ளனர்.பள்ளியில் அமர்ந்து கடிதம் எழுதி, அதில், தங்கள் முகவரியையும் குறிப்பிட்டுள்ளனர். கடிதங்களை, நீடாமங்கலம் தபால் நிலையத்தில் உள்ள பெட்டியில் போட்டனர். மாணவர்களின் இந்த செயலை, பொதுமக்கள், விவசாயிகள் பாராட்டினர்.