சென்னை: பராமரிப்பு பணி முடிந்த நிலையில், தமிழக அரசின் இணையதளம், நேற்று சீரானது.
தமிழக அரசின் அதிகாரபூர்வ இணையதளமான, www.tn.gov.in ஏப்ரல், 20ல் முடங்கியது. இதனால், அரசின், 'ஆன்லைன்' சேவைகளை பெற முடியாமலும், அரசின் அறிவிப்புகள், உத்தரவுகள், முக்கிய தகவல்களை அறிய முடியாமலும், மக்கள் தவித்தனர். தொழில்நுட்ப ரீதியான சில பிரச்னைகளே, அரசின் இணைய தளம் முடங்க காரணம் என, தெரிய வந்தது.இந்நிலையில், தொழில்நுட்ப பராமரிப்பு பணி முடிந்து, அரசின் இணைய தளம், நேற்று மீண்டும் செயல்பாட்டிற்குவந்தது.