சென்னை:பள்ளிக்கல்வி துறையில் பணியாற்றும், நான்கு இணை இயக்குனர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

பள்ளிக்கல்வி துறையில் பணியாற்றும், மேல்நிலைப்பள்ளி இணை இயக்குனர், உமா, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கும்,அங்கு, பணியாற்றும், இணை இயக்குனர் வாசு, பள்ளிக்கல்வியின் நாட்டு நலப்பணி திட்டத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.நாட்டுநலப்பணி திட்டத்தில் பணியாற்றும், செல்வக்குமார், அனைவருக்கும் கல்வி இயக்ககத்துக்கும், அங்குபணியாற்றும், ராதாகிருஷ்ணன், மேல்நிலை கல்வி பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.