சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் வீட்டுக்கடன் பெறுவதற்கான நிபந்தனைகளை தமிழக அரசு தளர்த்தி உள்ளது.


அரசு ஊழியர்கள் வீட்டுக்கடன் பெறுவதற்கான நிபந்தனைகளை தளர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வீட்டுக்கடன் பெற அரசு ஊழியர்கள் 6 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும் என்பது தற்போதைய நிலையாக உள்ளது.

இந்நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வீட்டுக்கடன் பெறுவதற்கான பணிக்காலம் 6 ஆண்டுகளில் இருந்து 4 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.

வீட்டுக்கடன் பெற இனி 4 ஆண்டுகள் பணியாற்றி இருந்தாலே போதும் என தமிழக அரசு அரசாணையில கூறியுள்ளது.