சென்னை, சென்னை பல்கலையின், எம்.பி.ஏ., மாணவர் சேர்க்கைக்கு, ஜூன், 22ல் நுழைவு தேர்வு நடக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை பல்கலையில், இரண்டு ஆண்டு, எம்.பி.ஏ., எக்ஸ்கியூட்டிவ் படிப்பு நடத்தப்படுகிறது. இதில், மாணவர்கள் சேர, ஜூன், 22ல் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான ஆன்லைன் பதிவு, நேற்று முன்தினம் துவங்கியுள்ளது. ஜூன், 18 வரை,www.unom.ac.in என்ற, இணையதளத்தில் பதிவு செய்யலாம் என, பல்கலை அறிவித்துள்ளது.