சென்னை: விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பாத மெட்ரிக் பள்ளிகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணிக்கு மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் வராததால் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்களை அனுப்பாத மெட்ரிக் பள்ளி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட மாட்டாது என அரசுத் தேர்வுகள்துறை இயக்குநர் வசுந்தாதேவி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 2 ஆண்டுகள் ஆசிரியர் பணி அனுபவமுள்ளவர்களை விடைத்தாள் திருத்த அனுப்ப வேண்டும் என தேர்வுகள்துறை உத்தரவிட்டுள்ளது.