நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 3 தனியார் நிறுவனங்கள் மூலம் தரமான பயிற்சி தரப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பெருந்துறையில் உண்டு உறைவிட பயிற்சி மைய துவக்க விழாவில் பேசிய அவர், தமிழகம், ஆந்திரா, ராஜஸ்தான் நிறுவனங்கள் மூலம் தரமான பயிற்சி தரப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், புதிய பாடத்திட்டங்களுக்கேற்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.