சென்னை: பத்தாம் வகுப்புக்கான தற்காலிக சான்றிதழ் வினியோகம், நேற்று துவங்கியது.தமிழக பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பொது தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
இதுவரை, பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏற்கனவே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.பத்தாம் வகுப்புக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வினியோகம், நேற்று துவங்கியது. அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும், தங்களிடம் படித்த மாணவர்களுக்கும், அங்கு தேர்வு எழுதிய தனித்தேர்வர்களுக்கும், சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்து வழங்கப்படுகின்றன.பள்ளிகளுக்கு நேரில் செல்ல முடியாதவர்கள், அரசு தேர்வுத்துறையின், http://www.dge.tn.nic.in

என்ற இணையதளத்தில், பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி, தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்.