சென்னை: ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு கூட்டம் வரும் 19-ம் தேதி திருச்சியில் நடைபெறும் என்று ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு செய்தி தொடர்பாளர் கு.தியாகராஜன் அறிவித்துள்ளார். ஏற்கனவே மே 20-ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்த கூட்டம் 19-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. திருச்சி உயர்மட்டக்குழு கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.