சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகியுள்ளது. இதில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.1% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.


தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வுகள் மார்ச் 1-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந் தேதி முடிவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 6 ஆயிரத்து 903 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.

அனைத்து மாணவர்களும் தேர்வு எழுத தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2 ஆயிரத்து 942 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தனி தேர்வர்களுடன் சேர்த்து 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் தேர்வு எழுதினார்கள்.

விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்து, மதிப்பெண்கள் கம்ப்யூட்டர் மூலம் சான்றிதழில் பதிவு செய்யும் பணி நடந்தது. இப்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தேர்வு முடிவுகளை வெளியிட்டார். அதன்படி, பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.1% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவிகள் 94.1% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 87.7% தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவிகிதம் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 1% குறைந்துள்ளது.

www.dge.tn.nic.in,www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகளை பதிவு இறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இம்முறை பிளஸ் டூ தேர்வு தொடர்பான புள்ளி விவரங்களையும் இணையத்தில் செய்தியாளர்கள் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.