சென்னை:பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு தொடர்பான, புள்ளிவிபரங்கள் அடங்கிய அறிக்கையை, நாளிதழ்கள் உள்ளிட்ட செய்தி ஊடகங்கள், இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளும், புதிய முறையை, அரசு தேர்வுகள் இயக்ககம் அறிமுகப்படுத்த உள்ளது.

இது குறித்து, அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள அறிவிப்பு:மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடந்த, பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள், 16ம் தேதி காலை, 9:30 மணிக்கு வெளியிடப்பட உள்ளன. 
அது தொடர்பான புள்ளிவிபரங்கள் அடங்கிய பகுப்பாய்வு அறிக்கையை, ஊடகவியலாளர்கள், இணையதளம் வாயிலாகபதிவிறக்கம் செய்து கொள்ளும், புதிய நடைமுறையை, தேர்வு துறை அறிமுகப்படுத்துகிறது.அதன்படி, 'www.dge.tn.nic.in' மற்றும், 'www.dge.tn.gov.in' என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம்.
ஊடகவியலாளர்கள், இவ்வசதியினை பயன்படுத்தி, தேர்வு முடிவுகள் வெளியாகும் நாளன்று, தேர்வு முடிவுகள் சார்ந்த புள்ளி விபரங்களைபதிவிறக்கம் செய்யலாம்.மேலும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பொது, தேர்வுகளுக்கும், இதே நடைமுறை பின்பற்றப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பிளேடால் கழுத்தை அறுத்து காவலர் தற்கொலை முயற்சி
தஞ்சாவூர், மே 13-திருமணத்திற்கு பெண் பார்ப்பது பிடிக்காமல், தஞ்சை ஆயுதப்படை பயிற்சியில் இருந்த காவலர் ஒருவர், பிளேடால் கழுத்தை அறுத்து, தற்கொலைக்கு முயன்றார்.கரூர் மாவட்டம், தான்தோன்றிமலையை சேர்ந்த, தினேஷ்குமார், 26. பி.இ., படித்துள்ளார்.தஞ்சையில் உள்ள பழைய, எஸ்.பி., அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஆயுதப்படையில் சேர்ந்து, ஏழு மாதங்களாக, பயிற்சி பெற்று வருகிறார். வரும், 30ம் தேதி, பயிற்சி நிறைவு பெறும் நிலையில், நேற்று மதியம், உணவு இடைவேளையின் போது, பாத்ரூம் செல்வதாக நண்பர்களிடம் தெரிவித்துள்ளார்.வெகு நேரமாகியும், அவர் திரும்பி வராததால், அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, பிளேடால் கழுத்தையும், வலது கையையும் அறுத்து, தினேஷ்குமார் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். தினேஷ்குமாரை மீட்டு, தஞ்சை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், சேர்த்துள்ளனர்.இது குறித்து தகவல் அறிந்த, போலீஸ் எஸ்.பி., செந்தில்குமார், மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினார்.தினேஷ்குமாருக்கு திருமணம் செய்வதற்காக அவரது பெற்றோர், 20 நாள்களுக்கு முன், பெண் பார்த்துள்ளனர். அந்த பெண்னை பிடிக்கவில்லை என, தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.இருப்பினும், பயிற்சி முடித்தவுடன், திருமணம் என பெற்றோர் கூறியதால், தினேஷ்குமார் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்துள்ளது.