சென்னை : நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுக்குப்பின் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க 24 மணி நேரம் இயங்கும் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தேர்வு முடிவால் மனச்சோர்வடையும் மாணவர்கள் உதவி மையத்தை 14417 என்ற எண்ணில் அழைத்து ஆலோசனை பெறலாம் என்று தெரிவித்தார். மேலும் 2 மணித்துளிகளில் செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். ஆகா தேர்வு முடிவுகள் வந்து சேரும் என்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.