நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலத்தில் பணி ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு முன்னாள் மாணவர்கள் பரிசு வழங்கியுள்ளனர்.

பாராட்டு விழாவில் ஆசிரியர் ஆனந்தராசுக்கு ரூ.9 லட்சம் மதிப்புள்ள காரை முன்னாள் மாணவர்கள் பரிசாக வழங்கியுள்ளனர். மேலும் 4 சவரன் தங்கச்சங்கிலி, ஒரு சவரன் மோதிரத்தையும் ஆசிரியருக்கு அணிவித்து நன்றி கூறியுள்ளனர்