கோவை, அண்ணா பல்கலையின் கோவை மண்டல வளாகத்தில், பி.இ., படிப்புகள் துவக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோவை அண்ணா பல்கலை, 2012ல், மண்டல மையமாக அறிவிக்கப்பட்டு, சென்னை அண்ணா பல்கலையுடன் இணைக்கப்பட்டது.இடப்பற்றாக்குறை காரணத்தை முன்வைத்து, இளநிலை பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது; முதுநிலை படிப்புகள் மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டன.நடப்பு கல்வியாண்டு முதல், இளநிலை படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்த, மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, பொறியியல் கலந்தாய்வில், கோவை மாணவர்களுக்கு, 240 இடங்கள் கூடுதலாக தேர்வு செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது.அண்ணா பல்கலை கோவை மண்டல வளாக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தற்போது, பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல் இன்ஜி., -இ.சி.இ., - இ.இ.இ., ஆகிய நான்கு படிப்பு துவக்க அனுமதி கிடைத்துள்ளது. நான்கு பிரிவுகளில், தலா, 60 வீதம், 240 மாணவர் சேர்க்கப்படுவர்.'கோவை மாணவர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். தற்போது, எம்.இ., - எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., உட்பட, 19 முதுநிலை பிரிவுகளில், 340 மாணவர்கள் படித்துவருகின்றனர்' என்றார்.