சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை போலீசார் தடுத்து நிறுத்தியதையடுத்து சேப்பாக்கம் வாலாஜா சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தினால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.