சென்னை, 'பள்ளி வாகன சிறப்பு சட்டத்தின்படி, தகுதிச்சான்று பெறாத வாகனங்களை இயக்கினால், அவை, பறிமுதல் செய்யப்படும்' என, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பள்ளி வாகன சிறப்பு சட்டத்தின்படி, கோடை விடுமுறையில், பள்ளி வாகனங்களை, ஆர்.டி.ஓ., முன்னிலையிலான குழுவிடம், ஆய்வுக்கு உட்படுத்தி, தகுதி சான்றிதழ் பெற வேண்டும்.பெரும்பாலான வாகனங்கள், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. சில பள்ளிகள், தங்கள் வாகனங்களை ஆய்வுக்கு உட்படுத்தி, தகுதி சான்றிதழ் பெறாமல் உள்ளன.கோடை விடுமுறை முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், தகுதிச்சான்று பெறாத பள்ளி வாகனங்களை இயக்கக்கூடாது; மீறி இயக்கினால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என, போக்குவரத்து துறை அதிகாரிகள் எச்சரித்துஉள்ளனர்.