சிவகாசி:மூலப்பொருட்கள் விலை உயர்வால், சிவகாசியில் தயாராகும் பாட நோட்டுகளின் விலை 10 சதவீதம் உயர்ந்துள்ளது.
கோடை விடுமுறை முடிந்து ஜூனில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. இதனால் பாட நோட்டுகள் தயார் செய்யும் பணி சிவகாசியில் 25 க்கு மேற்பட்ட கம்பெனிகளில் தீவிரமாக நடந்து வருகிறது. இங்கிருந்து தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. நோட்டு தயாரிக்கும் வெள்ளை தாள், பைண்டிங் அட்டை, பசை உள்ளிட்ட மூலப்பொருட்கள் விலை உயர்ந்துள்ளன. வெள்ளை காகிதம் டன்னிற்கு 5 முதல் 8 சதவீதம், அட்டை 10 சதவீதம் உயர்ந்துள்ளன. இதனால் நோட்டுகளின் விலையும் கடந்தாண்டை விட 10 சதவீதம் விலை உயர்ந்துள்ளது.a
'தரத்தால் தனி மவுசு'இங்கு தயாரிக்கப்படும் நோட்டுகள் தரமாக இருப்பதால் தனிமவுசு உண்டு. கடந்தாண்டு கடும் பேப்பர் தட்டுப்பாடு இருந்தது. இந்தாண்டு ஆர்டர் கணிசமாக வந்துள்ளது. ஜூனுக்குள் முடிக்க வேண்டும் என்பதால் பணிகள் துரிதமாக நடக்கிறதுமாரிராஜன், சீமா நோட்புக்