பிளஸ் 2 தேர்வில், பாட வாரியான தேர்ச்சியில், உயிரியல் மற்றும் பொருளியல் பாடங்களில், மதிப்பெண் குறைந்துள்ளது.
பிளஸ் 2 பாடவாரியான தேர்ச்சியில், புவியியல் மற்றும் ஊட்டச்சத்து, உணவு பதப்படுத்துதல் பாடத்தில், அதிகபட்சமாக, 99 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொழி பாடங்கள் மற்றும் ஆங்கிலத்தில், 97 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இயற்பியல், கணிதம், 96; வேதியியல், 95; உயிரியல், 96.34; தாவரவியல், 94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். விலங்கியலில், 92 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். விலங்கியலில் வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக, நமது நாளிதழில், ஏற்கனவே செய்தி வெளியாகியிருந்தது. உயிரியல் மற்றும் விலங்கியல் தேர்வில் பெரும்பாலான மாணவர்கள், 90 சதவீதத்திற்கு மேல் தேர்ச்சி பெற்றிருந்தாலும், 150 மதிப்பெண் வரை மட்டுமே பெற்றுள்ளனர். பொருளியல் மற்றும் வணிகவியல் பாடங்களிலும், மாணவர்களின் மதிப்பெண்ணும், தேர்ச்சி சதவீதமும் குறைந்துள்ளது. குறைவாக வணிகவியலில், 90; பொருளியலில், 91 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.