தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையால் நிர்வாக சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டு
அனைத்து வகை பள்ளிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு வேலூர் வருவாய் மாவட்டம் 0l.06.2018 முதல் ஐந்து கல்வி மாவட்டங்களாக பிரித்து
செயல்பட ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே செயல்பட்டு வந்த மாவட்டக் கல்வி அலுவலகங்கள் வேலூர், திருப்பத்தூர் உடன் கூடுதலாக மூன்று கல்வி மாவட்டங்கள் அரக்கோணம், இராணிப்பேட்டை, வாணியம்பாடி ஆகிய இடங்களை மையமாக கொண்டு செயல்படும். ஒவ்வொரு மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கும் கீழ்குறிப்பிட்ட ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளை நிர்வகிக்க மாவட்டக் கல்வி அலுவலகங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது