சென்னை: பத்தாம் வகுப்பு, சிறப்பு துணை தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், நாளை முதல், 'ஹால் டிக்கெட்'டைபதிவிறக்கம் செய்யலாம்.
பத்தாம் வகுப்புக்கான, மார்ச் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்வுக்கு விண்ணப்பித்து பங்கேற்காதவர்களுக்காக, சிறப்பு துணை தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், நாளை முதல், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.தேர்வர்கள், http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். அறிவியல் தேர்வு எழுத உள்ளவர்களுக்கு, வரும், 25 மற்றும், 26ம் தேதிகளில், செய்முறை தேர்வு நடத்தப்படும்.ஹால் டிக்கெட்டில் ஒதுக்கப்பட்ட தேர்வு மைய பள்ளிக்கு சென்று, செய்முறை தேர்வில் பங்கேற்கலாம் என, தேர்வுத்துறை இயக்ககம்

தெரிவித்துள்ளது.