Sunday, June 10, 2018

ஐ.ஐ.டி., நுழைவு தேர்வில், 12 சதவீதம், 'பாஸ்' 51வது இடம் பிடித்தார் தமிழக மாணவர்

ஐ.ஐ.டி.,யில் சேருவதற்கான, ஜே.இ.இ., நுழைவு தேர்வு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. ஹரியானா மாணவர், தேசிய அளவில் முதலிடம் பெற்றார். சென்னை தனியார் பள்ளி மாணவர், தேசிய அளவில், 51ம் இடம் பிடித்தார்.


IIT,ஐ.ஐ.டி., நுழைவு தேர்வு,12 சதவீதம்,பாஸ்,51வது இடம்,தமிழக மாணவர்

ஐ.ஐ.டி., மற்றும், என்.ஐ.டி.,யில், மாணவர்கள் சேர்க்கைக்கான, ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் நுழைவு தேர்வு முடிவை, தேர்வை நடத்திய, கான்பூர் ஐ.ஐ.டி., நேற்று வெளியிட்டது. இதில், மொத்தம், 360 மதிப்பெண்களுக்கு, 337 மதிப்பெண் பெற்று, ஹரியானா மாணவர், பிரணவ் கோயல், தேசிய, 'ரேங்க்' பட்டியலில் முதலிடம் பெற்றார். இவர், ஐ.ஐ.டி., ரூர்க்கி மண்டலத்தில், பதிவு செய்து தேர்வு எழுதியவர்.


தமிழகத்தில், சென்னை மண்டலத்தில், சென்னை ஐ.ஐ.டி.,யில் பதிவு செய்த, விஜயவாடாவைச் சேர்ந்த மாணவர், மவுரிசிவ கிருஷ்ண மனோகர், அகில இந்திய அளவில், ஆறாம் இடம் பெற்றுள்ளார்.

சென்னையில், 'பிட்ஜீ' பயிற்சி மைய மாணவர், கிரிநாத், 285 மதிப்பெண் பெற்று, தேசிய அளவில், 51ம் இடம் பிடித்துள்ளார். இவர், சென்னை மகரிஷி வித்யாமந்திர் பள்ளியில் படித்து, பயிற்சி மையத்தில், நான்கு ஆண்டுகளாக பயிற்சி பெற்றவர். அதேபோல, பல மாணவர்கள், பிட்ஜீ மையத்தில் படித்து தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு, சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடந்த விழாவில், பாராட்டும், ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

தேசிய அளவில், 23 ஐ.ஐ.டி.,க்களில், 11 ஆயிரத்து, 279 இடங்களுக்கு, தேர்வு நடத்தப்பட்டது. இதில், 1.55 லட்சம் பேர் பங்கேற்றனர். அவர்களில், 2,076 மாணவியர் உட்பட, 18 ஆயிரத்து, 138 பேர், ஐ.ஐ.டி.,யில் சேர தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பொதுப் பிரிவில், 8,794 பேர்; பிற்படுத்தப்பட்ட பிரிவில், 3,140; தலித் மாணவர்களில், 4,709 மற்றும் பழங்குடியினர் பிரிவில், 1,495 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஐ.ஐ.டி.,க்களில், மாணவியரின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்காக, இந்த ஆண்டு முதல், மாணவியருக்கு தனி இட ஒதுக்கீடு அறிவிக்கப் பட்டுள்ளது. இதன்படி, 800 இடங்கள் மாணவியருக்கு மட்டும், தனியாக ஒதுக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiw



thank you!