சில நாட்களாக புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் வாழைக்கொல்லை கிராமத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியானது குழந்தைகளே இல்லாமல் ஆசிரியர்கள் காத்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டே இருந்தன.

    கடந்த ஞாயிறன்று நடந்த தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வில் யாரும் வாழைக்கொல்லை பள்ளியை விரும்பாத போதும் திருமதி. *S.ஆரோக்கியமேரி* என்னும் ஆசிரியை மிகுந்த சவாலுடன் அப்பள்ளியை தேர்வு செய்து தலைமை ஆசிரியையாகப் பொறுப்பேற்றார்.
     பொறுப்பேற்றது முதல் ஊர் மக்களுடன் பேசி  இன்று ஒரு நாள் மட்டும் 12 மாணவ மாணவிகளை சேர்த்துள்ளார்.
    இதற்கு உறுதுணையாக இருந்த. இடைநிலை ஆசிரியர் திரு.,S.A ஆரோக்கிய லாரன்ஸ் அவர்களையும் தலைமையாசிரியை அவர்களையும் மனதாரப் பாராட்டுவோம்.