கல்வி நிறுவன கட்டடங்களுக்கு நகர் மற்றும் ஊரமைப்புத் துறையின் ஒப்புதலை பெற, ஜூலை 13 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து,தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: கடந்த 2011 -ஆம் ஆண்டு ஜனவரி 1 -ஆம் தேதிக்கு முன்பாக செயல்பட்டு வரும் கல்வி நிறுவன கட்டடங்கள், நகர் மற்றும் ஊரமைப்புத் துறையின் ஒப்புதல் பெறுவது அவசியமாகும். இதற்காக ஒருமுறை கட்டணம், சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள், விதிகள் மற்றும் விண்ணப்ப விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு தமிழக அரசின் இணையதளமான www.tn.gov.in/tcp மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தினை உரிய கட்டணத்துடன் சமர்ப்பிக்க ஜூலை 13 -ஆம் தேதி கடைசி நாளாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!