சென்னை:தொடக்க கல்வி ஆசிரியருக்கான, 'டிப்ளமா' படிப்பில் சேர, வரும், 18ம் தேதி முதல், 30ம் தேதி வரை, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், அறிவொளி வெளியிட்ட செய்திக்குறிப்பு:நடப்பு, 2018 - 19ம் ஆண்டுக்கு உரிய, தொடக்க கல்வி டிப்ளமா படிப்புக்கு, ஒற்றை சாளர முறையில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
இதற்கான விண்ணப்பங்கள்,www.tnscert.org என்ற இணையதளத்தில், வரும், 18ம் தேதி முதல், 30ம் தேதி வரை வெளியிடப்படும்.மாணவர்கள் தங்கள் விபரங்களை, ஆன்லைனிலேயே பதிவேற்றம் செய்யலாம்.இதற்கான கட்டணத்தை, ஆன்லைன் முறையில் செலுத்தலாம். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு, 250 ரூபாயும், மற்றவர்களுக்கு, 500 ரூபாயும், விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுஉள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.