சென்னை: மத்திய அரசின், இந்திய சேவை பணிகளில், 24 வகை பதவிகளில், 782 காலியிடங்களை நிரப்ப, பிப்ரவரியில், முதல் நிலை தேர்வு அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் குடிமை பணிகள் ஆணையமான, யு.பி.எஸ்.சி., இந்த அறிவிப்பை வெளியிட்டது.


இதில், முதற்கட்டமாக, முதல் நிலை தகுதி தேர்வு, நாடு முழுவதும் நேற்று நடந்தது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என, 22 மொழிகளில் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை, தமிழகத்தில், 10க்கும் மேற்பட்ட மையங்களில், 30 ஆயிரம் பேர் உட்பட, நாடு முழுவதும் மூன்று லட்சம் பேர் எழுதினர்.