சென்னை: புதிய பாடத்திட்டத்தில் கி.மு, கி.பி நீக்கப்பட்டதில் மதம் சார்ந்தது ஒன்றுமில்லை என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அளித்துள்ள விளக்கத்தில், கி.மு என்பது பொது ஆண்டுக்கு முன் எனவும், கி.பி என்பது பொது ஆண்டுக்கு பின் எனவும் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கி.மு, கி.பி என்பதற்கு பதிலாக பொது.ஆ.மு, பொ.ஆ.பி எனக் குறிப்பிடுவது சர்வதேச வழக்கம் என அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.