சென்னை: சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், மாணவர் சேர்க்கைக்கான தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், பல்வேறு பட்டப்படிப்புகள், சான்றிதழ் மற்றும் டிப்ளமா படிப்புகளில், மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. சேர்க்கைக்கான தேதி முடியவிருந்த நிலையில், வரும், 25ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.படிப்பில் சேர விரும்புவோர், பல்கலை வளாகத்தில் உள்ள, ஒற்றை சாளர மாணவர் சேர்க்கை மையத்தை, சனி, ஞாயிறு உள்ளிட்ட, அனைத்து நாட்களிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும், https://www.ideunom.ac.in என்ற இணையதளம் வாயிலாகவும், விண்ணப்பங்களை அளிக்கலாம் என, சென்னை பல்கலை பதிவாளர்,

சீனிவாசன் தெரிவித்துள்ளார்.