சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' சார்பில், காலவரையற்ற போராட்டம் துவக்கப்பட்டு உள்ளது.
பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ சார்பில், தமிழகம் முழுவதும், நேற்று முதல், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் துவங்கியது. மாவட்ட தலைநகரங்களில், ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். சென்னையில், அரசு அலுவலகங்கள் உள்ள, எழிலகம் வளாகத்தில் போராட்டம் துவங்கியது. 'பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 'ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, 21 மாத ஊதிய உயர்வு நிலுவை தொகை வழங்க வேண்டும்' என்பது உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள், நேற்று பணிக்கு செல்லவில்லை. இன்றும் போராட்டம் தொடர்கிறது.