சென்னை: பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பித்தவாகளுக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் நாளை மறுநாள் (ஜூன் 28) வெளியிட உள்ளது.
அன்றைய தினம் காலை 8.30 மணிக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. உடனடியாக மாணவாகளின் பார்வைக்காக அண்ணா பல்கலைக்கழக இணையதளத்திலும் பட்டியல் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.

அரசு ஒதுக்கீட்டு பி.இ. இடங்களுக்கான ஆன்-லைன் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் ஜூலை இரண்டாம் வாரத்தில் தொடங்க உள்ளது. இதில் பங்கேற்க மொத்தம் 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 மாணவ, மாணவிகள் ஆன்-லைனில் விண்ணப்பப் பதிவை செய்திருந்தனா. இவாகளுக்கான சமவாய்ப்பு எண் கடந்த 5 ஆம் தேதி வெளியிடப்பட்டது.